Wednesday, November 5, 2008

மன்மத கவி...

தனிமையில் இருக்கும் தலைவனும் தலைவியும், பேசிக்கொள்வதாய் மட்டுமே சித்தரித்த பாடல்கள் இப்பொழுது சினிமா பாடல்கள் முலம் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளன. தலைவனும் தலைவியும் பேசிக்கொண்டு மட்டுமா இருப்பார்கள், அடுத்தது என்ன என்பதை கையில் எடுத்துள்ளது சினிமா. உதாரணத்திற்கு,

"மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண்படும் அல்லவா உன் மார்பிலே பொழியவா"

படித்துவிட்டீர்களா, சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்...இப்பொழுது மறுபடியும் மேலே உள்ள பாடல் வரிகளை படியுங்கள். அப்படியே நீங்கள் இதற்கு முன் பார்த்த (பார்த்ததில்லை என்று கூற வேண்டாம்) ஏதாவது ஒரு முழு "நீல" வண்ணப்படத்தை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். வைரமுத்துவின் வைர வரிகள், காதல் வேட்டையாடி விளையாடியிருப்பது தெரியும். அவருக்கு நமது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இதே பாணியில் வந்த வேறு சில பாடல்களை அலசுவோமே. அடடே இது எந்த படத்தில் வந்த பாடல் என்று என்னை கேட்க்காதீர்கள். அதை கண்டு பிடிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

"ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் வருமா"

என்று கவிஞர் கூறும் போது, கிருஷ்ணசாமி போன்ற சிலருக்கு தோன்றுவதெல்லாம் "இதை வெள்ளைகாரங்க தானே பண்ணுவாங்க, இது தமிழர் பண்பாட்டில் இல்லாத ஒன்று" என்பது தான். அவரை பொறுத்த மட்டில் உதடோடு உதடு பதித்து முத்தம் கொடுப்பது தமிழ் பண்பாடில்லை. இதற்காக அவர் கமல்ஹாசனுடன் சண்டை கூட போட்டார். சரி சரி அரசியல் வேண்டாம், விஷயத்துக்கு வருவோம். மேற்கண்ட பாடல் வரிகளை நாம் ரசிகவே செய்கிறோம். உக்காந்து யோசிப்பார்களோ என்று அச்சர்யப்படுகிறோம்.


"என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்"

அடடே இதை விட சிறந்த முறையில் தலைவன் தலைவி புனருவதை எடுத்து காட்ட முடியாது என்று நினைக்கும் வேளையில்,"ஏன் முடியாது? நான் வைரமுத்துக்கெல்லாம் சீனியர்" என்று கர்ஜிக்கிறார் வலிபக்கவிஞர் வாலி.

"ஒரு சின்ன பூத்திரியில் ஒலி சிந்தும் ராத்திரியில்

இந்த மெத்தைமேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டவா"

என்று தலைவன் கேட்க தலைவியோ

"ஒரு ஜன்னல் அங்கிருக்கு உன்னை எட்டி பார்ப்பதற்கு

அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டிட வா" என்கிறாள்.

கவித்துவமாக எழுதும் வாலி சில பல சமயங்களில் படு லோக்கலாகவும் எழுதி கைதட்டல் வாங்கிவிடுகிறார்.

"உரலு ஒன்னு அங்கேருக்கு 

உலக்கை ஒன்னு இங்கேருக்கு 

நெல்லு குத்த நேரமாச்சி 

சொல்லடி என் சித்திரமே" எனும் தலைவனுக்கு தலைவியின் பதில் 

"நெல்லு குத்த நேரம் இல்ல

பாவம் நீயும் வெடல பையன் 

நெல்லு குத்த இடம் கொடுத்தா

மாட்டிக்குவே உரலுக்குள்ளே" என்பதுதான்.

அதோடு நிற்கிறாரா, "மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேடீனீ ஷோ கூப்பிடுவேள்"என்று பிராமன பாஷையில் கலக்கிவிடுகிறார்.

இரட்டை அர்த்த பாடல்களிலும் வாலிக்கு நிகர் வாலியே -

"கொல்லையில பொம்பளைங்க புடலங்காய்க்கு கல்ல கட்டுற ஊரு இது யம்மா யம்மா ஊரு இது,

'அட தொங்குகிற காய்க்கு' எல்லாம் கல்லை கட்ட முடியுமாடி யக்கா யக்கா"

என்று கொக்கரிக்கிறார். யக்காவா அடங்கொக்கமக்கா... jhonny walker உதவியுடன் பாட்டு எழுதுவாரோ, அப்படியே கற்பனை கொட்டுதே.

"மாங்காய் மாங்காய் ரெண்டு மாங்காய்
மார்கெட்டு போகாத குண்டு மாங்காய்"

இதில் உள்ள கருத்தாழத்தை பாருங்கள், மார்கெட்டு என்பதை நீங்கள் 'மார்' 'கெட்டு' என்று பிரித்து பாருங்கள், வாலியின் கவிநயம் புரியும். சற்றே விரசமாக இருந்தாலும் நம்மையும் அறியாமல் இதழோரத்தில் ஒரு சிறு புன்னகை எட்டி பார்த்து விடுகிறது. என்ன செய்வது, அது ஆண்களுக்கேயுள்ள "manufacturing defect".


"அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தாள்,
கேள்வி எழுமுன் விழுந்தாள்
என்ன உடலோ என்ன உறவோ"
என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். மேற்குறிப்பிட்ட பாடல்கள் அளவிற்கு வெளிப்படையாகவோ அல்லது இலை மறை காயாகவோ இல்லாவிட்டலும், பாடலை படத்தில் பார்க்கும் போது ம்ம்ம்... நினைவில் வரும் நடிகை ஸ்ரீதேவியை சற்று காத்திருக்க சொல்லிவிட்டு அடுத்த பத்திக்கு செல்லுங்கள்.


இளம் கவிஞர்களும் பின்னே இல்லை. அவர்கள் பங்குக்கு நல்ல நேர்த்தியான பாடல்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். பாடல்களில் காதல் ரசம் சொட்டுகிறது.

"எனது ஊதடுகள்
ஊந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீரியே
முதுகில் எங்கும்
நூறு ஓவியங்கள்" என்று தொடங்கும் பா விஜய் பின்பு

"எங்கு துவங்கி?
எங்கு முடிக்க?
எதனை விடுத்து?
எதனை எடுக்க?
என்ன செய்ய?
ஏது செய்ய?
உரச உரச ..."என்று அவரும் குழம்பி நம்மையும் குழப்பி விடுகிறார்.
அவரே "ரெண்டுலதான் ஒன்ன தொட வாரியா" என்று கேள்வி கேட்டு நமது BPயை ஏற்றி பின்
"கன்னம் ரெண்டுலத்தான் ஒன்ன தொட வாரியா" என்று விடை கொடுத்து BPயை normal ஆக்கிவிடுகிறார்.


இப்படி கவிஞர்கள் அனுபவப்பட்டு பாடல்கள் எழுதும் போது நாம் கேட்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கவிஞர் சொல்ல வருவதை அசை போட்டும் பாக்கலாம். அசை போடுங்கள், இதே போல காதல் கொப்பளிக்கும் பாடல்களை நீங்கள் கேட்டிருப்பின் எந்த ப்ளோகில் பதிவு செய்யுங்களேன், ஏனெனில் எனக்கு இப்பொழுது இவ்வளவே நியாபகத்தில் இருக்கிறது.

-- தவிடு

2 comments:

aamaran said...

என்னங்க ஆச்சி ஒண்ணுத்தையும் விட்டு வைக்க மாட்டீர்கள் போல இருக்கே.
தவிடு, புண்ணாக்கு என்ன புனை பேரா.....

அடுத்தது என்ன?

Sakthi said...

மிஸ்டர் தவிடு சகல கலா வல்லவர் போல இருக்கிறது. சகல துறைகைளையும் கையில் எடுத்து பிரித்து மேய்கிறார்(இதில் இரட்டை அர்த்தம் எதுவும் இல்லை. நம்புங்கள். ) பேசாமல் நீங்கள் தற்போது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு ஏதேனும் பத்திரிகைக்கு நிருபராய் வேலைக்கு சேர்ந்து விட்டால் உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசம். ஆனால் அதே நேரம் அடி வாங்க உடம்பில் தெம்பும் வேண்டும். தீர்க்க தரிசி... ஐ. ஆர் 20 அரிசி. (அய்யயோ.. அடுத்த கட்டுரையை எந்த பெயரில் எழுதுவது என்று நானே எடுத்து கொடுத்துட்டேனோ.. அதாங்க அரிசி... ஹி..ஹி)