Monday, November 3, 2008

இளிச்ச வாய் தமிழன்

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுள், இருந்துட்டு போகட்டும் எக்ஸ்ட்ரா என்று அஜித்தையும் சேர்த்து விட்டு இருக்கிறார்கள்.

இது ஒன்றும் சரித்திர புகழ் வாய்ந்த விஷயம் இல்லை என்றாலும் இதில் உள்ள உள்குத்தை சிறிது அலசி பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

இந்த பிரச்சனைக்கு காரணம் குருவி ரசிகர்கள் தான் என்று அஜித் விசிறிகள் நினைக்க கூடும். உண்மை அதுவன்று. அஜித்தை போல ஒரு போட்டியாளர் விஜய்க்கும், விஜய் போல ஒரு போட்டியாளர் அஜித்துக்கும் இருப்பது இருவருக்கும் அவசியம். அவர்களால் தனித்து சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியாது என்பதை இரு பக்க ரசிகர்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அப்படியென்றால் இதற்கு யார் காரணமாக இருக்க வேண்டும்?

இதற்கு பதில் தேடுவதற்கு முன் நாம் யோசிக்க வேண்டியது இதைத்தான், "நடிகர் சங்கம் மட்டும் இது போன்ற பிரச்சனைகளுக்கு கொடி பிடிப்பது ஏன்?" இவர்கள் நடத்தும் போராட்டங்கள் தமிழ் நாட்டை தாண்டி வெளியே தெரிய போவதில்லை. டில்லியிலுள்ள யாரும் "அடடே நடிகர் சங்கம் ஆர்பாட்டம்" என்று தொலை காட்சியை பார்க்க போவது இல்லை. இது நடிகர் சங்கத்துக்கு தெரியாதா? தெரியும், பின்பு ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் விரும்புவதே தமிழ் நாட்டு மக்களின் கவனத்தை அடைவது தான். இதனால் அவர்களுக்கு என்ன பயன்? வேறு என்ன அரசியல் தான்.

சினிமா வரலாற்றை பாருங்கள். சிவாஜி கணேசன் தலைமையில் தான் இது போல முதல் கூட்டம் நடந்தது. அப்போழுது அவர் காங்கிரஸ் காட்சியில் இருந்தார். அதன் பின்பு விஜயகாந்த் காவிரி நீர் பிரச்சனைக்கு கொடி பிடித்து நாம் அறிந்ததே, அப்பொழுது அவர் தீவிர அரசியலில் ஈடு பட்டு கொண்டிருந்தார். இப்போது குதிரையின் கடிவாளம் சரத்குமார் கையில் உள்ளது. அவரும் அரசியலில் இருக்கிறார் என்பதை கவனத்தில் வைத்து கொள்ளவும்.

சிவாஜி காலத்தில் நான் சிறுவன் ஆகையால் அவருடைய நோக்கம் நான் அறியாதது. அதை பற்றி நான் பேசுவது சரியன்று. ஆனால் விஜய்காந்த் மற்றும் சரத்குமார் அவர்களின் நோக்கத்தை நான் கண்டிப்பாக பேசலாம். இவர்கள் இருவரும் நடிகர் சங்க தலைவர் பதவி வகித்ததே, நாளை தமிழ் நாட்டு அரசியலுக்கு அது உதவும் என்று தான். ஒரு நடிகர் சங்கத்தை தலைமை தாங்குவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை அவர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள்.

ஒரு சமூக பிரச்சனைக்கு நடிகர் சங்கம் குரல் கொடுத்தால், அதன் தலைவர் வெளிச்சத்திற்கு வந்து விடுவார். "அட நம்ப பிரச்சனைக்கு இவர் போராடுராரே" என்று எல்லோரும் அந்த தலைவரை ஒரு விடுவெள்ளியாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.இதுவே அரசியல் சாணக்யம்.

விஜயகாந்த் தலைமையில் இதைத்தான் செய்தார். இதனால் விஜயகாந்த்துக்கும் சரத்குமாருக்கும் முட்டிக்கொண்டது நாம் அறிந்ததே. விருதாச்சலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்ற பிறகு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்க்காகவே காத்திருந்த சரத்குமார் நடிகர் சங்க தலைவர் பதவியை பிடித்து கொண்டார். இப்போது அவர் வெளிச்சத்துக்கு வர முயற்சிக்கிறார்.

அதற்கு என்ன செய்ய வேண்டும், விஜய்காந்த் போல ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்து கொண்டார் ஒகேநேகள் பிரச்னையை. சரி புது தலைவர் ஏதோ ஆசை படுகிறார் என்ற தோரணையில் பெரிய நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் வந்தவர்கள் பலர் கூட்டத்தில் பேச மறுத்து விட்டார்கள், இதில் அஜித்தும் ஒருவர். இதனால் கடுப்பானார் சரத்குமார். நூறு நாள் ஓடும் என்று எதிர்பார்த்த படம், வெளிவந்த அன்றே அவர் படம் போல போட்டிக்குள் முடங்கியதை, போல இருந்தது அவருக்கு. அது மட்டும் இன்றி நடிகர்களில் பலருக்கு இது போல கூட்டத்தில் கலந்து கொள்வது பிடிக்க வில்லை என்ற கசப்பான உண்மையையும் அவர் விழுங்க வேண்டியிருந்தது.

அடுத்து அவர் கையில் இருக்கும் பெரிய அஸ்திரம் ஈழத் தமிழர் பிரச்சனை, இதற்க்கு உண்ணா விரதம் இருக்கலாம் என்று மாஸ்டர் பிளான் போட்டார் சரத், ஆனால் இது நடிகர்கள் மத்தியில் அதிருப்தியையே கொண்டு வந்ததே மிச்சம். இது போன்ற கூடங்களில் அரசியல் உள்நோக்கம் இருப்பதை பல நடிகர்கள் விரும்ப வில்லை. மக்கள் பிரச்சனையை சரத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைப்பதை பலர் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுள் அஜித்தும் ஒருவர். சரத்தை தவிர யார் தலைமை தாங்கி இருந்தாலும் இந்த அதிருப்தி நடிகர்களுள் எழுந்து இருக்காது, என்பதை சரத்தால் ஜீரநித்துகொள்ள முடியவில்லை.

அஜித் விளம்பர நிகழ்ச்சிகளிலும், அரசியல் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை பல வருடங்களாக தவிர்த்து வருகிறார். இதை அவரது கொள்கையாகவும் வைத்து கொண்டிருக்கிறார். நடிகர் சங்கம் நடத்தும் வெளி நாட்டு கலை நிகழ்ச்சிகளில் கூட அவர் 'தலை' காட்டுவதில்லை. ஒரு பெரிய தொகையை கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவார். சரத்தின் அரசியல் நோக்கத்திற்கு தானும் மறைமுகமாக பயன் படுத்த படுவதை அவர் விரும்பவில்லை. நடிகர் சங்கத்தை பொறுத்த வரை அஜித் கண்டிப்பாக கலந்து கொள்ள போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதனாலேயே அஜித்திடம் இதை பற்றி அவர்கள் பேசவே இல்லை.

இங்குதான் சரத்தும் அவரது ஆதரவாளர்களும் வேறு மாதிரி யோசித்தார்கள். இப்பேர்ப்பட்ட அஜித்தை கலந்து கொள்ள வைத்து, பேசவும் வைத்துவிட்டால்... அது சரத்துக்கு ஒரு நடிகர் சங்கத்தலைவனாக பெரிய வெற்றியாகும். யாராலும் அடக்க முடியாத காட்டு குதிரையை அடக்கியதற்கு சமம். அஜித்துக்கு செக் வைக்க முடிவு எடுக்க பட்டது. "உண்ணா விரதத்தில் அஜித் கலந்து கொள்ள போவதில்லை" என்று பரப்பி விட்டனர் நக்கீரன் மூலம். சரத் ஒரு காலத்தில் பத்திரிக்கையாளராக இருந்தது அவருக்கு கை கொடுத்து. அஜித்தின் பேரை மட்டும் பயன்படுத்தினால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அர்ஜுனையும் கோதாவில் இறக்கி விட்டுவிட்டனர். இளிச்ச வாயன் ஆயிற்றே தமிழன். நக்கீரன் போன்ற மூன்றாம் தர பத்திரிக்கையை நம்பி தொலைத்தான். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அஜித் பேரை சொல்லி காசு பார்த்து விட்டார் நக்கீரன்.

இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மக்கள் நம்ப ஒரு விதத்தில் அஜித்தும் காரணம். ஒரு காலத்தில் அவர் கொடுத்த பேட்டிகள், வெளிப்படையான விளக்கங்களும் அவருக்கு Bad Boy image கொடுத்ததை மறுக்க முடியாது. இப்போது சாந்த சொருபமாக, முற்றிலும் மாறியவராக இருந்தாலும் "அஜித்தா அவர் சொல்லி இருப்பார்" என்று மக்கள் நம்பும் அளவிற்கு அவருடைய இறந்த காலம் அவரை தொடர்ந்தே வந்துள்ளது.

அஜித், அர்ஜுன் படங்களை திரையிட மாட்டோம் என்று ஓவர்சீஸ் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்த அஜித் தனது கொள்கையை விட்டு கொடுக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். உண்ணா விருதத்திற்கு கலந்து கொள்ள சம்மதித்தார். ஆனால் அப்பொழுதும் அவர் பத்திரிக்கைகளில் மட்டுமே பேட்டி கொடுத்தார், அர்ஜுனைபோல தொலை காட்சிக்கு கொடுக்க வில்லை. இதனால் அஜித் கண்டிப்பாக கூட்டத்தில் பேச வேண்டும் என்று மீண்டும் செக் வைத்தார்கள், இதற்கும் அஜித் இணங்க வேண்டியதாகி விட்டது.

சரத் சாதித்து விட்டார். அடுத்து அஜித்துக்கு ஆதரவு தருவதுபோல அவரது கோடி கணக்கிலான ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முயற்சிப்பார் சரத். விஜய்க்கும் அஜித்துக்கும் சம அளவில்லான ரசிகர்கள் இருந்தாலும், அஜித்தின் ரசிகர்கள் எப்பொழுதுமே ஒரு படி மேல்தான். அஜித்தை போல தோல்வி படம் தந்தவர்கள் இப்பொழுது சினிமாவில் இல்லை. ஆனால் அஜித் இருக்கிறார், காரணம் அவருடைய ரசிகர்கள் அந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள்.

ஆனால் சரத்தின் இந்த உள்நோக்கத்திற்கு ஆப்பு வைப்பது போல இருந்தது அஜித்தின் பேச்சு, "சினிமாத்துறையை சினிமாவாக இருக்க விடுங்கள்" என்று அவர் கூறியது, சினிமாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களை எதிர்த்துதான். "மக்களுக்கு போராடுரேன்னு முதலை கண்ணீர் வடிக்காதிர்கள், முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என்பதே அவர் கூற வந்தது. சம்பந்தபட்டவர்களுக்கு இது புரிந்திருக்க வேண்டும். அதனால் தான் என்னமோ அஜித்தை வைத்து திரும்பவும் பிரச்சனையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பில்லாவில் அஜித் சொன்ன வசனம் "சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க, அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணுதான். நாம வாழனும்னா யார வேணும்னாலும் கொல்லலாம்". அஜித்தின் வசனத்தை சரத் சற்று சீரியசாக எடுத்து கொண்டு விட்டார் போல...

-- புண்ணாக்கு

13 comments:

Guruprasath said...

நல்ல சிந்தனை. எளிய நடை. சிற்சில எழுத்துபிழைகளைத் தவிர்த்தால்,இன்னும் சிறப்பாக இருக்கும்.வாழ்த்துகள்

Anonymous said...

very good articles fantastic...

Mr.Clean said...

கோடிக்கணக்கான ரசிகர்களா!???
------------------------------
ரஜினிக்கு ஒரு கோடி
கமலுக்கு ஒரு கோடி
விஜய்க்கு ஒரு கோடி
விஜயகாந்திற்க்கு ஒரு கோடி
அஜித்திற்கு ஒரு கோடி
சரத்துக்கு ஒரு அம்பது லட்சம்
சத்தியராஜுக்கு ஒரு அம்பது லட்சம்
சிம்பு,தனுசுக்கு சேர்த்து ஒரு அம்பது லட்சம்,
அப்பறம் சின்னஞ் சிறு சில்லு வண்டிகளுக்கு மொத்தமாக ஒரு கோடி.

டேய் மக்கா! தமிழ் நாடு தாங்காது டா சாமி.

Duft said...

அஜித்தின் நல்ல மனதிற்காக நாங்கள் எவளவு ஆதரவு வேண்டும் என்றாலும் தருவோம். தல எங்கள் ரோல் மாடல் என்றைக்குமே. ஹொகேனக்கல் விஷியத்தில் விஜய் அவர்கள் "இது இரண்டு சினிமா உலகத்திற்கு நாடாகும் கருது வேறுபாடு" என்று உலரினது போல எங்கள் தல உலர மாட்டார். இஷ்டம் இருந்தால் பேசுவர், இல்லை எனில் விட்டு விடுவர். ஆடி புலி ஆட்டம் ஆடி எரிச்சலை எத மாட்டார்.

தல வாழ்க

harishtheboss_87 said...

Superb post.This post should reach as many people as possible

doodle doo how do u do? said...

awesome article.very true of what you have said.good analysis. nee nadathu punaakku.
sarathkumar ai punnakku

மு.கார்த்திகேயன் said...

nalla article.. really everyone should understand that whatever tamil film did is only for stunt. no real thinking..

Ajith always great!

Dhaarvi said...

Wonderful Realistic Article expose the backend truth
With Regards,

Dhamo

http://www.dhaarvi.blogspot.com

aamaran said...

//அஜித்தை போல ஒரு போட்டியாளர் விஜய்க்கும், விஜய் போல ஒரு போட்டியாளர் அஜித்துக்கும் இருப்பது இருவருக்கும் அவசியம். அவர்களால் தனித்து சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியாது என்பதை இரு பக்க ரசிகர்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள்.//

நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறீர்கள். அஜித் ஒரு gentleman என்பதை எடுத்து கூறியதற்கு நன்றி. அவரை வைத்து அரசியல் செய்ய நினைபவர்களை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

இளைய கரிகாலன் said...

சிந்திக்க வேண்டிய விஷயம்.
நடிகர்களின் உண்ணாவிரத போராட்டத்தை இன்னொரு பார்வை கொண்டு அலசியிருக்கிறீர்கள்.
யோசிக்க வேண்டிய விஷயம்.
நன்றி!

பரஞ்சோதி said...

நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறீர்கள். அஜித் ஒரு gentleman என்பதை எடுத்து கூறியதற்கு நன்றி. அவரை வைத்து அரசியல் செய்ய நினைபவர்களை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

Anonymous said...

அஜித் ஒரு gentleman என்பதை எடுத்து கூறியதற்கு நன்றி. அவரை வைத்து அரசியல் செய்ய நினைபவர்களை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

ஷாஜி said...

அஜித் ஒரு gentleman என்பதை எடுத்து கூறியதற்கு நன்றி. அஜித்தின் நல்ல மனதிற்காக நாங்கள் எவளவு ஆதரவு வேண்டும் என்றாலும் தருவோம். தல எங்கள் ரோல் மாடல் என்றைக்குமே.